Hair Growth: தனியா தண்ணீர் போதும்... முடி கொட்டுறது நின்னு, அடர்த்தியா வளரும்!

19 minutes ago 1

நீளமான, அடர்த்தியான முடி வேணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா அதுக்காக விலை உயர்ந்த ஷாம்பு, எண்ணெய் எல்லாம் பயன்படுத்த வேண்டியதில்லை. நம்ம கிச்சன்ல ஈஸியா கிடைக்கிற தனியாவே போதும். இந்த தனியா தண்ணீரை வெச்சு முடியை வேகமா வளர வைக்கலாம்.

13

முடியோட ஆரோக்கியத்தை சூப்பரா பார்த்துக்கும்

Image Credit : others

முடியோட ஆரோக்கியத்தை சூப்பரா பார்த்துக்கும்

நம்ம எல்லாருடைய கிச்சன்லயும் தனியா கண்டிப்பா இருக்கும். இதை நாம சமையலுக்குப் பயன்படுத்துவோம். ஆனா, இந்த தனியா நம்ம முடி ஆரோக்கியமா வளரவும் உதவுது. ஏன்னா, தனியாவுல வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச்சத்து, காப்பர், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்னு நிறைய இருக்கு. இதெல்லாம் முடியோட ஆரோக்கியத்தை சூப்பரா பார்த்துக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

23

முடி வளர்ச்சிக்கு தனியா தண்ணீர் எப்படி உதவுகிறது?

Image Credit : Getty

முடி வளர்ச்சிக்கு தனியா தண்ணீர் எப்படி உதவுகிறது?

தனியா தண்ணீர் முடியோட வேர்க்கால்களை வலுவாக்கும். தனியாவுல இருக்குற சத்துக்கள் ரத்த ஓட்டத்தை அதிகமாக்குது. இதனால, முடி கொட்டுறது குறையும். இதுல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய இருக்குறதால, முடி சீக்கிரம் நரைக்காது, முடி வெடிப்பும் வராது. தனியாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் குணங்கள் தலையில அரிப்பு, பொடுகு வராம தடுக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தினா, புது முடியும் நல்லா வளரும்.

33

இந்த தனியா தண்ணீரை எப்படித் தயாரிப்பது?

Image Credit : Getty

இந்த தனியா தண்ணீரை எப்படித் தயாரிப்பது?

ரெண்டு ஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணியில ராத்திரி முழுக்க ஊற வைங்க. அடுத்த நாள் காலையில, அந்த தண்ணியை 5-லிருந்து 10 நிமிஷம் மிதமான தீயில கொதிக்க வைங்க. தண்ணி ஆறினதும், அதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில்ல ஊத்திக்கோங்க.

பயன்படுத்தும் முறை:

ஹேர் ரின்ஸ்: ஷாம்பு போட்டு தலையை அலசுனதுக்கு அப்புறம், கடைசியா இந்த தனியா தண்ணியை ஊத்தி முடியையும், வேர்க்கால்களையும் நனைங்க. 10-15 நிமிஷம் கழிச்சு சாதாரண தண்ணியில அலசிடுங்க.

ஸ்ப்ரே: ஸ்ப்ரே பாட்டிலை வெச்சு, முடியோட வேர்க்கால்கள்ல நேரடியா ஸ்ப்ரே பண்ணுங்க. விரல்களால மெதுவா மசாஜ் செய்யுங்க. வாரத்துக்கு 2-லிருந்து 3 முறை இப்படி செய்யலாம். இது நிஜமாவே வேலை செய்யுமா? தனியா தண்ணீர் முடிக்கு நல்லதுதான். ஆனா, எல்லாருக்கும் ஒரே மாதிரி பலன் தராது. மரபணு காரணமா முடி கொட்டுறது, ஹார்மோன் கோளாறு, வைட்டமின் குறைபாடு இருந்தா, இந்த தண்ணீர் மட்டும் பத்தாது. மத்த சிகிச்சையும் தேவைப்படும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read Entire Article