Karthigai Deepam : ரேவதியை தடுத்து நிறுத்திய கார்த்திக்... கிழிக்கப்பட்ட டாக்குமென்ட்! கார்த்திகை தீபத்தில் பரபரப்பு

20 hours ago 1

ரேவதி கையெழுத்திட தயாராகும் நேரத்தில் சரியாக அங்கு வந்து சேரும் கார்த்திக், அவரை தடுத்து நிறுத்துகிறார். மேலும், கையில் இருந்த ஆவணத்தை கிழித்துப் போட்டுவிட்டு, “என்ன பண்ணிட்டு இருக்க?” என்று ரேவதியிடம் கடுமையாக கேட்கிறார். தொடர்ந்து ரேவதியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் கார்த்திக், “இந்த இரண்டு குடும்பங்களையும் சேர்க்கணும்னு தான் நான் வந்திருக்கேன். நீ இப்படி கையெழுத்து போட்டு கொடுத்துட்டா, எந்த காலத்திலும் இந்த குடும்பங்கள் ஒன்று சேராது” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.

இதனால் சாமுண்டீஸ்வரியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? ரேவதி கார்த்திக்கின் பேச்சை கேட்டு அவருடன் செல்வாரா? இரண்டு குடும்பங்களையும் ஒன்றிணைக்க கார்த்திக் எடுக்கப்போகும் அடுத்த முயற்சி என்ன? இனி வரும் காட்சிகளில் பரபரப்பான திருப்பங்கள் காத்திருக்கின்றன. இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Karthigai Deepam : ராஜராஜனை ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் சாமுண்டீஸ்வரி... சைடு கேப்பில் சதிவேலை பார்த்த சந்திரகலா

Read Entire Article