Last Updated:November 26, 2026 9:02 PM IST
ககன் அரோரா மற்றும் ஆதில் ஜாபர் கான் நடித்துள்ள 'தாய் சால்' (Dhai Chaal) என்ற அரசியல் தொடர் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

வார இறுதி நாட்களைக் கொண்டாடும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27, 2026) நெட்ஃபிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV) உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் 5 முக்கியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன.
இந்த வார வெளியீடுகளில் மிக முக்கியமானதாக அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் நடித்துள்ள 'திரிஷ்யம்: தி கன்குளூஷன்' (Drishyam: The Conclusion) திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. சாம் கொலை வழக்கில் எஸ்.பி. ராஜ்வீர் சிங் தோமருக்கு (ஜெய்தீப் அஹ்லாவத்) புதிய ஆதாரங்கள் கிடைப்பதால், விஜய் சல்கோன்கர் (அஜய் தேவ்கன்) மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற விஜய் போடும் புதிய திட்டமும், அதனால் ஏற்படும் புத்திசாலித்தனமான மோதல்களுமே இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களமாகும்.
இதேபோல், ககன் அரோரா மற்றும் ஆதில் ஜாபர் கான் நடித்துள்ள 'தாய் சால்' (Dhai Chaal) என்ற அரசியல் தொடர் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. வெளி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கல்லூரித் தேர்தலில் சிக்கிக்கொள்ளும் மாணவர் தலைவர் மயூர் பரத்வாஜ் எதிர்கொள்ளும் சவால்களையும், அரசியலின் சூழ்ச்சிகளையும் இத்தொடர் விவரிக்கிறது.
ஆன்மீகப் படமாக, சோபினவ் சத்யா நடித்துள்ள 'ஹனுமான் அன்ஷ்' (Hanuman Ansh) திரைப்படம் சோனிலிவ் தளத்தில் வெளியாகிறது. தாயை இழந்த சோகத்தில் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சிறுவன், தன்னலமற்ற சேவை மற்றும் பக்தியின் மூலம் 'நீம் கரோலி பாபா'வாக மாறிய வாழ்க்கை வரலாற்றை இப்படம் பேசுகிறது.
மேலும், சர்வதேசப் படைப்புகளாக 1980-ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த பள்ளி எரிவாயு விபத்தில் 9 வயது சிறுவனை இழந்த தாய் மற்றும் தாத்தாவின் மனப் போராட்டத்தைச் சொல்லும் 'தி சைல்ட்' (The Child) திரைப்படம் நெட்ஃபிக்ஸிலும்,
எதிர்கால உலகில் காணாமல் போன தனது இரட்டைச் சகோதரியைத் தேடிச் செல்லும் சகோதரனின் ஆபத்தான பயணத்தை மையமாகக் கொண்ட 'ஏப்ரல் எக்ஸ்' (April X) திரைப்படம் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) தளத்திலும் நாளை வெளியாகின்றன.

73 வயதிலும் குறையாத உற்சாகம்... “இதுதான் என் டயட் சீக்ரெட்” - மூத்த நடிகை லட்சுமி பகிர்ந்த டயட் சீக்ரெட்!
தற்போது 73 வயதாகும் நடிகை லட்சுமி, முதுமையிலும் இளமையாக இருந்து வருகிறார்.
இது எப்படி சாத்தியம் என்பது பற்றியும், தன் டயட் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.
வெஜிட்டேரியனான தான், எப்படி ஊட்டச்சத்துக்களை உறுதிசெய்தேன் என்றும் பகிர்வு!
.png)






English (US) ·