Weather Update | காற்றழுத்த தாழ்வுப் பாதை... தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

17 hours ago 2

Last Updated:November 28, 2026 6:42 AM IST

Weather Update | லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

கனமழை
கனமழை

நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Read Entire Article