Last Updated:November 28, 2026 10:38 PM IST
இந்த வழக்கு தொடர்பாக தற்போது தஞ்சாவூரை சேர்ந்த மேலும் 5 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கிலிருந்து 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககம் சார்பில் கிராமங்களில் அடிப்படை சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 15 ஆவது நிதிக் குழு சுகாதார மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி ஒன்றியங்களின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பயனர் முகவரிகளை முறைகேடாக பயன்படுத்தி 22 கோடியே 30 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் மாற்றி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், மூன்று மாநிலங்களுக்கு சென்ற சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மணி மியூல் வங்கி கணக்கு மூலமாக பணம் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது தஞ்சாவூரை சேர்ந்த மேலும் 5 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 14 ஆக உயர்ந்துள்ளது.
.png)








English (US) ·