
புதுடெல்லி: நவ. 25-
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 2027-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ‘இண்டியா’ கூட்டணிக்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் 130 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை காங்கிரஸ் வழங்கியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்கு வங்கி அடிப்படையில் காங்கிரஸுக்கு 26 தொகுதிகளை வழங்க சமாஜ்வாதி விருப்பம் தெரிவித்துள்ளது. அதில், கடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 60,000 முதல் 70,000 வாக்குகள், காங்கிரஸ் சுமார் 2,000 வாக்குகள் பெற்ற 20 வலுவான தொகுதிகளும் அடங்கும்.முன்மொழியப்பட்டுள்ள இந்த தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்” என்றார். தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, “தொகுதிகளைக் ‘கோருவதற்கும்’ ‘ஒத்துழைப்பதற்கும்’ வித்தியாசம் உள்ளது. ஒரு கூட்டணிக்குள் எதையும் கட்டாயப்படுத்திக் கேட்க வேண்டியதில்லை; இது பரஸ்பர ஒத்துழைப்பு சார்ந்த விஷயம். உள்ளே அமர்ந்து இதுகுறித்துப் பேசுவோம். கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் களைந்து, இருதரப்பினருக்கும் ஏற்புடைய, கவுரவமான உடன்பாட்டை எட்டுவதே எங்களது நோக்கம்” என்றார்.
.png)
8 hours ago
2






English (US) ·