ஐதராபாத்: நவ. 25-
ஐதராபாத் நகரின் பாசுபள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்கள் எச்சுமன் (24), சுரேஷ் (25), பவன் (25) என்பது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.