கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2026

14 hours ago 1

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*இடைத்தேர்தல் வேட்பாளர்கள், திமுக அறிவிப்பு: மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், அரியலூர் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர் களாக அறிவித்துள்ளது.

*நீதித்துறை விமர்சனம்:“நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல; ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஜனநாயகத்தில் அவசியம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ‘என்.சி.இ.ஆர்.டி. பாடநூல் சர்ச்சை’ தொடர்பான வழக்கின் நடவடிக்கைகளையும் உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* விஜய்யின் பேச்சுக்கு எதிராக திமுக செப். 12 அன்று மாநிலம் தழுவிய போராட்டம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் மற்றும் கலைஞர் குறித்து விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துகிறது. ஆட்சியின் குறைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விஜய் தரம் தாழ்ந்த பேச்சில் ஈடுபடுவதாக திமுக குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* மல்லிகார்ஜூன கார்கே பேரணிக்கு பிறகு ஹல்த்வானி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட ‘சுத்திகரிப்பு’ நிகழ்வு இந்தியச் சட்டப்படி நிச்சயமாக குற்றம்; அது கைது செய்யக்கூடிய குற்றம் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர்,  தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி, காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக கருதப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடந்தை கருணா

Read Entire Article