ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான முழக்கங்கள்!

13 hours ago 1

வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே

சமூக நீதிப் போராளிகள் வாழ்கவே!

காப்போம் காப்போம்

சமூக நீதி காப்போம்!

ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை

நடத்துவதில் குழப்பம் ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்

பிற்படுத்தப்பட்டோர் யாரென்ற

விளக்கம் தெளிவாய் இருக்கிறதே!

சமூகரீதியில், கல்வி ரீதியில்

பிற்படுத்தப்பட்ட மக்களைக்

கணக்கெடுக்கத் தயங்குவது ஏன்?

பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பில்

குழப்பம் ஏற்படுத்தத் துடிப்பது ஏன்?

எத்தனைக் காலம், எத்தனைக் காலம்?

உரிமைப் போராட்டம் எத்தனைக் காலம்?

இந்தியாவின் வெகுமக்களான

பிற்படுத்தப் பட்டோருக்கு

அநீதி ஏன்? அநீதி ஏன்?

ஜாதிவாரிக் கணக்கு என்ன?

நீதிமன்றம் கேட்கிறதே!

நீதிமன்றம் கேட்கும் கணக்கை

எடுத்துக் கொடுக்காமல் குழப்புவது ஏன்?

பிற்படுத்தப்பட்ட மக்களை

வஞ்சிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சே!

வஞ்சிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வே!

ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம்!

பிற்படுத்தப்பட்டோர் ஏமாற மாட்டோம்!

ஒடுக்கப்பட்டோர் ஏமாற மாட்டோம்!

அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகப்

பொருளாதார அளவுகோல் ஏன்?

நீதித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்!

கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்!

ஆட்சித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்!

தனியார்த் துறையில் பார்ப்பன ஆதிக்கம்!

பார்ப்பன ஆதிக்கத்தை நிலைப்படுத்த

பார்ப்பன ஜனதா திட்டமா?

இத்தனைக் காலம் இத்தனைக் காலம்

Backward class என்றால் யாரைக் குறிக்கும்?

இப்போது திரிபுவாதம் செய்வது ஏன்?

பா.ஜ.க.வே பதில் சொல்!

ஆர்.எஸ்.எஸ்.சே. பதில் சொல்!

வகுப்பு என்றால், வகுப்பு என்றால்

ஜாதி இல்லாமல் வேறு என்ன?

வகுப்பு என்பதே வகுப்பு என்பதே

ஜாதிகளின் தொகுப்புதானே!

அரசியல் சட்டக் கர்த்தாவாம்

டாக்டர் அண்ணல் அம்பேத்கரும்,

நீதிமன்றத் தீர்ப்புகளும்

தெளிவாய்ச் சொன்ன பின்னாலும்

குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும்

பா.ஜ.க.வைக் கண்டிக்கிறோம்!

ஆர்.எஸ்.எஸ்.சைக் கண்டிக்கிறோம்!

பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களே

இன்னும் உறக்கமா? இன்னும் உறக்கமா?

எழுவீர் எழுவீர்!

போராட்டக் களத்துக்கு

வருவீர்! வருவீர்!

வகுப்புரிமை எங்கள் பிறப்புரிமை!

இடஒதுக்கீடு எங்கள் பிறப்புரிமை!

இடஒதுக்கீட்டை ஒழிக்க நினைத்தால்

ஒடுக்கப்பட்டோர் எரிமலையாவோம்!

பிற்படுத்தப்பட்டோர் எரிமலையாவோம்!

வெல்லட்டும் வெல்லட்டும்!

சமூகநீதி வெல்லட்டும்!

போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

– திராவிடர் கழகம்

Read Entire Article