சென்னை, செப். 10– தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலாண்டுத் தேர்வுகள் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தேர்வு நேரங்கள் மற்றும் அட்டவணை விவரம்:
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை: செப்டம்பர் 16 முதல் 24 வரை குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அந்தந்தப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
9-ஆம் வகுப்பு: மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் 10-ஆம் வகுப்பு: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறும். பாடவாரியாக தேர்வு அட்டவணை (9 மற்றும் 10-ஆம் வகுப்புகள்):
செப்டம்பர் 16 (செவ்வாய்): தமிழ், செப்டம்பர் 17 (புதன்): ஆங்கிலம், செப்டம்பர் 18 (வியாழன்): விருப்பப் பாடம், செப்டம்பர் 21 (திங்கள்): கணிதம், செப்டம்பர் 22 (செவ்வாய்): உடற்கல்வி, செப்டம்பர் 23 (புதன்): அறிவியல், செப்டம்பர் 24 (வியாழன்): சமூக அறிவியல்.
10 நாட்கள் காலாண்டு விடுமுறை: காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர் களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் மீண்டும் திறக்கப்படும்.
.png)
13 hours ago
1




English (US) ·