தீவிர சிகிச்சைப் பிரிவில் தவெக எம்எல்ஏ

10 hours ago 1

20db4132-d9d7-499c-bdfe-d020f4f49dac

வி.எஸ். பாபு. - கோப்புப் படம்: நியூஸ் 18

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவருமான வி.எஸ்.பாபு, திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 9) முதல் கடுமையான சுவாசப் பிரச்சினையால் அவதியுற்ற பாபு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்குச் சுவாசக் கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடலின் முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகள் தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், திடீரென உடல்நலக்குறைவுக்கு ஆளானது கட்சித் தொண்டர்கள், தொகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய், முக்கியமான நிர்வாகிகள் ஆகியோர் மருத்துவமனை வட்டாரங்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து வருகின்றனர்.

Read Entire Article