தொகுதி மறுவரையறை; ப. சிதம்பரம் கருத்திற்கு முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மறுப்பு

2 hours ago 1

இது குறித்து முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வெளியிட்டுள்ள செய்தியில், “தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை தற்போதைய அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த போது தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கோ, நாடாளுமன்றத்தில் நமக்குரிய அரசியல் வலிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையையும் தி.மு.க.வும், கழகத்தலைவர் மு.க. ஸ்டாலினும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்பாக, திராவிட மாடல் அரசு ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தினார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ப.சிதம்பரம் அவர்கள், தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானத்தில் தி.மு.கழகம் தெரிவித்த கருத்துக்கள் என்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவுக்கு மாண்புமிகு கழக சட்டமன்ற கொறடா திரு.எ.வ.வேலு அவர்களின் மறுப்புச் செய்தி:


தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை தற்போதைய அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த போது தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கோ, நாடாளுமன்றத்தில் நமக்குரிய அரசியல் வலிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையையும் தி.மு.க.வும், கழகத்தலைவர் @mkstalin அவர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், இது தொடர்பாக, திராவிட மாடல் அரசு ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தினார்.

மேலும், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்துடன் இணைத்து தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுமானால், அது 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதையும்,

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவையில் தற்போது 7.18 விழுக்காடாக உள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறைக்கப்படக் கூடாது என்பதையும் தி.மு.க சார்பில் சட்டப்பேரவையில் பதிவு செய்தோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

மேலும், இவை அனைத்தும் சட்டமன்ற அவைக்குறிப்புகளிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. எனவே, இதற்கு மாறான கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

While the resolution on delimitation was brought forward by the present government, we made our position absolutely clear in the Assembly. The DMK and our President Thiru @mkstalin Avargal will never allow any delimitation exercise that undermines Tamil Nadu’s political representation or its rightful share in Parliament.

Our Honourable Leader of the Opposition Thiru @Udhaystalin Avargal also placed on record that the Dravidian Model Government had already passed a resolution in the Tamil Nadu Legislative Assembly firmly asserting that the State’s existing parliamentary representation must be protected.

We further made it clear that if delimitation is undertaken in connection with the Women’s Reservation Bill, it must be based on the 1971 Census.

Most importantly, Tamil Nadu’s current share of 7.18% in the Lok Sabha must not be reduced under any circumstances, irrespective of any changes arising from the exercise.

This has been our consistent stand in the Tamil Nadu Legislative Assembly and it is clearly on record. Therefore, expressing views to the contrary is inappropriate and uacceptable.

— DMK (@arivalayam) November 29, 2026

மேலும், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்துடன் இணைத்து தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுமானால், அது 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவையில் தற்போது 7.18 விழுக்காடாக உள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் குறைக்கப்படக் கூடாது என்பதையும் தி.மு.க சார்பில் சட்டப்பேரவையில் பதிவு செய்தோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும், இவை அனைத்தும் சட்டமன்ற அவைக்குறிப்புகளிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. எனவே, இதற்கு மாறான கருத்துக்களைத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article