தொகுதி மறுவரையறை மசோதா: தென் மாநிலங்களின் நிலைப்பாடு என்ன?

22 minutes ago 1

Last Updated:November 28, 2026 10:32 PM IST

தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை தென் மாநிலங்களில் சுமார் 60 சதவீத எம்.பி.க்கள் ஆதரிக்கவுள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதா
தொகுதி மறுவரையறை மசோதா

தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை தென் மாநிலங்களில் சுமார் 60 சதவீத எம்.பி.க்கள் ஆதரிக்கவுள்ளனர். தொகுதி மறுவரையறை திருத்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், தற்போதுள்ள 540 எம்.பி.க்களும் வாக்களித்தால், மசோதா நிறைவேற 360 வாக்குகள் தேவை.

இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 320 வாக்குகளுடன், திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவும் இணையும்போது, ஆதரவு பலம் 342 ஆக உயர்கிறது. இவர்களுடன், 8 எம்.பி-க்களைக் கொண்டுள்ள சரத் பவார் கட்சியும், 4 எம்.பி-க்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க உள்ளதால், மசோதாவிற்கான மொத்த ஆதரவு 354 வாக்குகளாக உயர்ந்துள்ளது.

540 உறுப்பினர்களும் வாக்களித்தால் தேவைப்படும் 360 வாக்குகள் என்ற வெற்றி இலக்கை எட்ட, இன்னும் 6 வாக்குகள் மட்டுமே தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. சபாநாயகர், சிறையில் உள்ள எம்.பி.க்கள், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களிக்க முடியாத சூழலில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பது அல்லது வெளிநடப்பு செய்வது போன்றவை நிகழ்ந்தால், தேவையான பெரும்பான்மை இலக்கு எளிதில் எட்டப்பட்டு, மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இதையும் வாசிக்க: இந்தியாவில் 850 எம்பி-க்கள்... எந்த நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட அவை இருக்கிறது?

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை திமுக, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா, மதச்சார்பற்ற ஜனதா தளம் என முக்கியக் கட்சிகளின் எம்.பி-க்கள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 129 எம்.பி-க்களில் 75 பேர் ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்; அதாவது சுமார் 60 சதவீத தென் மாநில எம்.பி-க்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க உள்ளனர்.

Read Entire Article