‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா மோகனன்!

1 day ago 1

Last Updated:November 24, 2026 9:38 PM IST

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதற்கான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதற்கான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிக்கும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இந்தப் படத்தில் ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக இளையராஜா இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இளையராஜா படத்திலிருந்து விலகினார்.

இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. நடிகர் விஜய் சேதுபதி தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் நடித்துள்ள ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ‘பாக்கெட் நாவல்’ வெளியாகிறது. அதன் பிறகு, மணிரத்னம் இயக்கி வரும் ‘இஞ்சி வெல்லம்’ படம் வெளியாக உள்ளது.

Read Entire Article