போஸ்டன் நகரில் என்டர்பிரைஸ்எஸ்ஜி அலுவலகம் திறப்பு

16 hours ago 1

0eacf6e0-aa29-4aea-84f8-3fb50b7c594f

சட்ட அமைச்சர் எட்வின் டோங் (இடமிருந்து மூன்றாவது) புதிய நிலையத்தைத் திறந்து வைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பு, அமெரிக்காவின் போஸ்டன் நகரில் அலுவலகம் திறந்துள்ளது.

அதன் மூலம் அமெரிக்காவில் சீராக இயங்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

போஸ்டனில் திறக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ்எஸ்ஜி அலுவலகம், அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் ஐந்தாவது நிலையமாகும். சட்ட அமைச்சர் எட்வின் டோங் புதன்கிழமை (செப்டம்பர் 9) அந்நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், முதன்முறையாக என்டர்பிரைஸ்எஸ்ஜி, அமெரிக்க மாநிலம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அது, மசாசூசூசட்ஸ் அனைத்துலக வர்த்தகம், முதலீட்டு அலுவலகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம், சிங்கப்பூருக்கும் மசாசூசட்சில் இயங்கும் வர்த்தகங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட தரப்புகளுக்கு இடையேயும் வாழ்க்கை அறிவியல், எரிசக்தி, இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, அதிநவீன உற்பத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த 250க்கும் அதிகமான நிறுவனங்கள் அமெரிக்காவின் 45 மாநிலங்களில் தங்களது கிளைகளுடன் செயல்படுகின்றன. அந்த வகையில், உள்ளூர் வர்த்தகங்கள் இயங்கும் ஐந்து முன்னணி வெளிநாட்டுச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது.

போஸ்டனில் திறக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ்எஸ்ஜி நிலையம், அமெரிக்கச் சந்தையில் செயலாற்ற விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சந்தைத் தகவல்களை வழங்குவது போன்ற வழிகளில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article