Real Estate: வீடு கட்டும்போது பிளான் செய்த பட்ஜெட்டை விட செலவு எகிறக்கூடாதா? பிளான் செய்வது எப்படி?

16 hours ago 1

சொந்த வீடு கட்டும்போது பட்ஜெட் எகிறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கட்டுமான நிபுணர் கூறும் 3 வகையான பட்ஜெட் திட்டமிடலை அறியுங்கள்.

Published:1 min agoUpdated:1 min ago

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

சொந்த வீடு கட்டும்போது பிளான் போட்ட பட்ஜெட்டை விட, அதிகமாகச் செலவாவதையே நாம் பார்த்திருப்போம். இது பெரும்பாலும் நிதர்சனமான உண்மைதான்.

ஆனால், இந்தப் பட்ஜெட்டை எகிறலை எப்படி தடுக்கலாம் என்பதை விளக்குகிறார் ரியல் எஸ்டேட் நிபுணர் கி.கேசவமூர்த்தி.

"ஒரு கட்டிடம் எந்தத் தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றால், அதன் அடிப்படை நிதித் திட்டமிடல்தான் முக்கியம்.

பட்ஜெட்டை மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

கி.கேசவமூர்த்தி நிறுவனர், www.goaler.co.in

கி.கேசவமூர்த்தி நிறுவனர், www.goaler.co.in

1. கட்டுமானத்திற்கு முந்தைய செலவுகள்: கட்டிட வரைபடம், ஸ்ட்ரக்சரல் டிசைன், எலிவேஷன் டிசைன், மண் பரிசோதனை மற்றும் கட்டிட அனுமதி பெற ஆகும் செலவுகள்.

2. கட்டுமானத்தின் போது ஆகும் செலவுகள்: அஸ்திவாரம் முதல் ஃபினிஷிங் வரை நேரடியாக ஆகும் கட்டுமானச் செலவுகள்.

3. கட்டுமானத்திற்குப் பிந்தைய பராமரிப்புச் செலவுகள்: வீடு கட்டி முடித்த பின் ஆகும் பராமரிப்புச் செலவுகள்.

ஆனால், பொதுவாக மக்கள் வீடு கட்ட பட்ஜெட் போடும்போது, சம்ப் தொட்டி கட்டுவது, பெயிண்டிங், லைட்டிங் போன்ற விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகிறார்கள்.

இதனால்தான், பட்ஜெட் எகிறுகிறது. இன்ஜினியரிடம் பேசும்போது, வீட்டில் என்னென்ன இடம்பெற வேண்டும்... என்னவெல்லாம் பிளான் செய்திருக்கிறீர்கள்... என்னென்ன உதிரி வேலைகள் இருக்கும் என்று அமர்ந்து பேசுங்கள்.

அனைத்தையும் பக்காவாகப் பேசி லிஸ்ட் எடுத்து, அனைத்திற்கும் சரியாகப் பட்ஜெட் பிளான் செய்தால், பட்ஜெட் எகிறுவதைத் தடுக்கலாம்."

முழுமையான விவரங்கள் வீடியோவில்...!

Read Entire Article