“அந்த பெண்ணின் நடிப்பைத் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை..” மகாராஜா படத்தில் சச்சனா நடிப்பை பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்!

11 hours ago 1

Last Updated:November 26, 2026 6:05 PM IST

மகாராஜா படத்தில் சச்சனா நமிதாஸின் நடிப்பை பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியுள்ளார்.

மகாராஜா படத்தில் சச்சனா நடிப்பை பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்
மகாராஜா படத்தில் சச்சனா நடிப்பை பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்

விஜய் சேதுபதியின் தமிழ்த் திரைப்படமான ‘மகாராஜா’வில் சச்சனா நமிதாஸின் நடிப்பை பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியுள்ளார்.

குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக மகாராஜா திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பள்ளி மாணவியாகவும், விஜய் சேதுபதியின் மகளாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சச்சனா நமிதாஸ். அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ‘மகாராஜா’ திரைப்படத்தில் சச்சனா நமிதாஸின் நடிப்பை ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் நிகழ்ச்சியில், சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வாரிய உறுப்பினர் கவிதா குப்தாவை சந்தித்த டாம் ஹாங்க்ஸ், சச்சனாவின் நடிப்பு தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article