Last Updated:November 27, 2026 7:48 AM IST
இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்நிலையில் சன் குழும ஊழியர்களுக்கு கலாநிதி மாறன் மெகா விருந்து அளித்து, ஒரு கிராம் தங்க நகையும் வழங்கினார்.

அனிருத் - காவியா மாறன் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், சன் குழும நிறுவன ஊழியர்களுக்கு மெகா விருந்து அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதையடுத்து அனிருத் - காவியா மாறன் திருமண நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ரஜினி, மு.க.ஸ்டாலின், அஜித், சிம்பு, தோனி, நயன்தாரா, சிம்ரன், சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து சன் குழும ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் மெகா விருந்து வைத்துள்ளார். அதில், பிரியாணி, வறுத்த கோழிக்கறி, மட்டன் சுக்கா, அவித்த முட்டை, இறால், குலாப் ஜாமூன், ஐஸ் க்ரீம், காடை, பாயாசம் என அறுசுவை உணவுகள் அடங்கிய விருந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஊழியர்களுக்கான விருந்து நிகழ்வில் அனிருத் - காவ்யா மாறன் கலந்து கொண்டனர். மேலும், ஊழியர்களுக்கு ஒரு கிராம் தங்க நகையும், ஸ்வீட் பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது.

73 வயதிலும் குறையாத உற்சாகம்... “இதுதான் என் டயட் சீக்ரெட்” - மூத்த நடிகை லட்சுமி பகிர்ந்த டயட் சீக்ரெட்!
தற்போது 73 வயதாகும் நடிகை லட்சுமி, முதுமையிலும் இளமையாக இருந்து வருகிறார்.
இது எப்படி சாத்தியம் என்பது பற்றியும், தன் டயட் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.
வெஜிட்டேரியனான தான், எப்படி ஊட்டச்சத்துக்களை உறுதிசெய்தேன் என்றும் பகிர்வு!
.png)



English (US) ·