‘புஷ்பா 2’ திரைப்படத்தின் வசூலை முறியடித்த ‘ராமாயணா’.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? 

15 minutes ago 1

Last Updated:November 27, 2026 10:16 AM IST

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வசூலை முறியடித்தது ராமாயணா. ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் 21 நாட்களில் 1,755 கோடி வசூல் செய்து சாதனை.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் வசூலை ‘ராமாயணா’ திரைப்படம் முறியடித்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது ‘ராமாயணா’ திரைப்படம். இந்தப் படத்தில் ராவணனாக யஷ் நடித்துள்ளார். ஹனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் 2வது பாகம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் 21 நாட்களில்  21 நாட்களில் 1,755 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதன் மூலம், அதிகம் வசூலித்த நான்காவது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ராமாயணா முதல் பாகம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இணைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராமாயணா படக்குழுவினர் சந்தித்தனர். நடிகர் ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் நிதிஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேசினர். 1,755 கோடி வசூல் மூலம் ‘புஷ்பா 2’ வசூலை ‘ராமாயணா’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article