ரவி மோகன் - ஆர்த்தி ரவி வழக்கு.. பாடகி கெனிஷா நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

12 hours ago 1

Last Updated:November 26, 2026 5:41 PM IST

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் பாடகி கெனிஷா டிசம்பர் மூன்றாம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரவி மோகன் வழக்கு
ரவி மோகன் வழக்கு

நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி ரவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி ரவிமோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்து, இணையத்தில் இருவர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை மீறி, ரவி மோகன் ஊடகங்களை சந்தித்ததாக ஆர்த்திரவி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவிமோகன் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரி ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையே கெனிஷாவுக்கு எதிராகவும் ஆர்த்தி ரவி, சிவில் அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும், ஏற்கெனவே சமூக ஊடகங்களில் தன்னை பற்றி கெனிஷா வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும், தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் மனு

வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட் சாட்சிகள் பதிவுக்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கெனிஷா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தற்போது மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜராகாதபட்சத்தில், இந்த வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் என மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்தான பொது அறிவிப்பையும் நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்றும் மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article