சிங்கப்பூரின் ‘ராஜா & டான்’ முன்னணிச் சட்ட நிறுவனத்துக்கு 247,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
100,000க்கும் மேற்பட்டோரின் தனிநபர் விவரங்கள் திருடப்பட்ட தரவுக்கசிவு சம்பவம் காரணமாகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை எண்கள், வங்கிக் கணக்கு, காப்புறுதி விவரங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி அந்நிறுவனக் கணினிக் கட்டமைப்புகளில் அசாதாரண நடவடிக்கை தென்பட்டதாக வெளிநிறுவனம் ஒன்று எச்சரித்தது.
ஆனால், வழக்கமான சோதனை எனக் கருதி இணையப் பாதுகாப்பு மேலாளர் அதனை அலட்சியப்படுத்தினார்.
அடுத்தடுத்த நாள்களில் தரவுகள் மேகக்கணினிக்கு மாற்றப்படுவதாக எச்சரிக்கப்பட்டபோதும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
பின்னர் ஜூலை மாதம் 27ஆம் தேதி மாதம் இணையத் தாக்குதல் குறித்து நிறுவனத்தின் தகவல் அமைப்புத் துறைத் தலைவரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்ட பிறகே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
அந்நிறுவனத்துடன் தொடர்புடைய வெளிநாட்டுச் சட்ட நிறுவனம் ஒன்றின் கணக்கு வழியாக ஊடுருவிய மர்ம நபர்கள், பலகட்ட அங்கீகார முறையைத் தாண்டி நிர்வாகக் கணக்கு விவரங்களைப் பெற்றனர்.
அதன்மூலம் 143,756 பேரின் விவரங்கள் திருடப்பட்டன.
அச்சம்பவம் குறித்துப் புலனாய்வு நடத்திய தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், முன்னதாக 317,000 வெள்ளி அபராதம் விதிக்கத் திட்டமிட்டது.
நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து அத்தொகை 247,000 வெள்ளியாகக் குறைக்கப்பட்டது.
எச்சரிக்கைகளைக் கையாள்வதற்கான முறையான நடைமுறைகள் இல்லாததே இத்தவற்றுக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்ட ‘ராஜா & டான்’, தற்போது தமது இணையப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
.png)






English (US) ·