“இளையராஜா இசை இந்தப் படத்துக்கு ஆசீர்வாதம்..” - ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்பராஜ்! 

1 hour ago 1

Last Updated:Sep 23, 2026 9:47 PM IST

“ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான்.” என ‘டோரதி’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்

“ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான்.” என ‘டோரதி’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் 10-வது படமாக உருவாகியுள்ளது ‘டோரதி’. இந்தப் படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் செப்.25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே இறைவி தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட. 'இறைவி'யை விட உணர்வுபூர்வமான கதை 'டோரதி'.இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

கலை இயக்குநர், எடிட்டர் என படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப குழுவினரும் திறமையானவர்கள். எல்லோரும் எல்லா வேலையும் இந்த படத்தில் பார்த்தோம். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார்.

சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி".

Read Entire Article